சென்னையின் ஸ்பெஷல் வடகறி: இட்லி, தோசைக்கு இப்படி செய்து பாருங்க!

Published On:

| By Minnambalam Desk

சென்னையின் பிரபலமான காலை உணவுகளில் வடகறிக்கு தனி இடம் உண்டு. ஹோட்டல்களில் கிடைக்கும் இந்த சுவையான சைட் டிஷ்ஷை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். பருப்பு சேர்த்து தயாரிக்கப்படும் வடையை, காரசாரமான வெங்காயத் தக்காளி குழம்பில் போட்டு ஊற வைப்பதுதான் இதன் சிறப்பு.

முதலில் வடையை தயார் செய்யலாம்

ADVERTISEMENT

கடலைப் பருப்பை சுமார் 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சோம்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

இந்தக் கலவையில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

வடகறிக்கு மசாலா முக்கியம்

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைத் தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

ADVERTISEMENT

இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு, தக்காளியைச் சேர்த்து நன்றாக குழைய விடவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் உள்ளிட்ட மசாலாக்களைச் சேர்த்து கிளற வேண்டும்.

வடையை குழம்பில் சேர்க்கும் நேரம்

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழம்பை கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதித்ததும் பொரித்த வடைகளை உதிர்த்து அதில் போட வேண்டும்.

வடைகள் குழம்பை உறிஞ்சிய பிறகு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சென்னையின் வடகறி தயார். சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறினால் அதன் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.


Vadakari Recipe, Chennai Vadakari, Vadakari, Set dosa, சென்னை ஸ்பெஷல், காலை உணவு, இட்லி சைடிஷ், தோசை சைடிஷ், 

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share