யார் அந்த சூப்பர் முதல்வர் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். Who is that super chief minister
நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச் 10) மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், திமுக எம்.பி. கனிமொழிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பிரதான் திமுக எம்.பி.க்கள் நாகரிகமற்றவர் என கூற, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசினார் கனிமொழி.
இதையடுத்து தனது வார்த்தைகளை திரும்ப பெறுவதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
எனினும், “நாவடக்கம் தேவை” என்று பிரதானுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்தநிலையில் பிரதான் பேசியதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
அவர் தனது எக்ஸ் பதிவில்,
“பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.
முதல் கேள்வி
திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது கேள்வி
மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்?
உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?
மூன்றாவது கேள்வி
யார் அந்த சூப்பர் முதல்வர்?
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, ஸ்டாலின் அவர்களே, இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது” என்று பதிவிட்டுள்ளார். Who is that super chief minister
பிரதானே தனது வார்த்தைகளை திரும்ப பெறுவதாக கூறிய நிலையில், அண்ணாமலை இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறார்.