தமிழ்நாடு கடந்த ஒரு மாதமாக தர்மேந்திர பிரதான் என்ற பெயரைச் சொல்லித்தான் கண்டன முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. இப்போது அது தீவிரமாகியிருக்கிறது. who is dharmendra pradhan
2025 பிப்ரவரி 15 ஆம் தேதி காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத வரைக்கும் நாங்கள் கல்வி நிதியை கொடுக்க மாட்டோம்” என்று திமிராகக் கொக்கரித்தார். அப்போது முதல் தமிழ்நாட்டின் உரிமைக் குரலை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களும், மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10 ஆம் தேதி தொடங்கிய நிலையில்… கல்வி நிதி பற்றி தமிழக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் குரல் எழுப்பினர். who is dharmendra pradhan
அப்போது பதில் சொல்ல எழுந்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “திமுக எம்.பி.க்கள் தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. தமிழக மக்கள் விஷயத்தில் அக்கறையாக இல்லை. அவர்கள் நாகரிகமற்றவர்கள். முதலில் உறுதி கொடுத்துவிட்டு தற்போது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்படி செயல்படுகிறார்கள். மொழிக்கு தடை போடுவது மட்டுமே அவர்களது வேலை. மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். அவர்கள் ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள். அவர்கள் (திமுக எம்பிக்கள்) நாகரிகமற்றவர்கள்…’ என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு திமுக எம்,பி.க்கள் கடுமையாக கண்டனக் குரல் எழுப்பினர்.
இதையடுத்து, ‘நான் என் வார்த்தையை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்’ என்று பிரதான் பம்மினாலும் தமிழக எம்.பி.க்கள் விடவில்லை. பிரதான் மீது நாடாளுமன்ற சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் பிரதானை கடுமையாக கண்டித்துள்ளார்.
யார் இவர்? who is dharmendra pradhan

இப்படி தமிழ்நாட்டுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் இந்த தர்மேந்திர பிரதான் யார்? இவரது பின்னணிதான் என்ன? who is dharmendra pradhan
ஒடிசா மாநிலம் பல்லல்ஹாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திர பிரதான். இவரது தந்தை தேபேந்திர பிரதான் பாஜகவின் மூத்த முன்னோடித் தலைவர். அதுமட்டுமல்ல, வாஜ்பாய் தலைமையிலான 1999-2004 அரசாங்கத்தில் தரை வழிப் போக்குவரத்து மற்றும் விவசாயத் துறையின் இணையமைச்சராக இருந்தவர். ஒடிசா பாஜக மாநிலத் தலைவர், தேசிய பாஜக துணைத் தலைவர் என முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.
பாஜக குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தர்மேந்திர பிரதான் 1983 இல் மாணவராக இருக்கும்போதே அதாவது தனது 14 ஆவது வயதிலேயே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான ஏபிவிபி மாணவர் அமைப்பில் இணைந்தார். அந்த சமயத்தில் ஒடிசாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஏபிவிபி தேசிய செயலாளராக இருந்த பிரதான் போலீசாரால் தாக்கப்பட்டார்.
சாதாரண உறுப்பினராக இணைந்த தர்மேந்திர பிரதான், ஏபிவிபியின் தேசிய செயலாளர் அளவுக்கு உயர்ந்தார்.
அப்பா பாஜகவின் மூத்த தலைவர் என்ற அடிப்படையில் தர்மேந்திர பிரதான் ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் 2000 ஆம் ஆண்டில் முதன் முதலாக போட்டியிட்டார். தனது சொந்தத் தொகுதியான பல்லல்ஹாராவிலிருந்து அவர் எம்.எல்.ஏ.வானார்.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் தன் தந்தையை அரசியலில் இருந்து ஓய்வுபெறச் சொல்லிவிட்டு… அவரது தியோகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் தர்மேந்திர பிரதானே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2009 தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், பாஜகவில் அவரது ஈடுபாடு மற்றும் உழைப்பு காரணமாக 2010 இல் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு கட்சிப் பணியாற்றினார் பிரதான். அதற்குப் பரிசாக 2012 இல் பிகாரில் இருந்து ராஜ்யசபா எம்பி ஆக்கப்பட்டார். அதன் பின் மத்திய பிரதேசத்திலிருந்து இரண்டாம் முறை ராஜ்ய சபா எம்பி ஆக்கப்பட்டார்.
இந்த நிலையில் மோடியின் முதல் ஆட்சியில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சராக இருந்த பிரதான், 2017 இல் அந்தத் துறையின் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றார், மேலும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் பொறுப்பையும் வழங்கினார்.
வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவை வெற்றிகரமாக செயல்படுத்தியதாக மோடியால் பாராட்டப்பட்டார் பிரதான். இந்த திட்டத்தில் கின்னஸ் சாதனையும் படைத்தார் பிரதான்.
இதனால் இவரை மோடியின் உஜ்வாலா மேன் என்று பாஜக வட்டாரத்தில் அழைக்கத் தொடங்கினர். who is dharmendra pradhan
14 வயது முதல்… who is dharmendra pradhan

2021 இல் ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து உடல் நல பிரச்சினைகளால் அவர் பதவி விலகினார். அப்போதுதான், தனது உஜ்வாலா மேன் என்று அழைக்கப்படும் தர்மேந்திர பிரதானை கல்வி அமைச்சராக்கினார் மோடி.
1983 இல் இருந்து ஆர்.எஸ்.எஸ். ரத்தம் நாடி நரம்பெல்லாம் ஊறிப் போன தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருந்தபோதுதான் நீட் வினாத் தாள் மோசடி இந்தியாவையே உலுக்கியது. ஆனபோதும் 2024 பொதுத் தேர்தலில் ஒடிசாவின் சம்பல்பூர் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்,
அதுமட்டுமல்ல… 2024 ஒடிசாவின் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற பெரும் காரணமாக இருந்தார் தர்மேந்திர பிரதான். 24 வருட பிஜு ஜனதா தள ஆட்சியை முடித்து, ஒடிசாவில் பாஜகவின் ஆட்சியை கொண்டுவந்ததால் பிரதானுக்கு டெல்லியிலும் நாக்பூரிலும் செல்வாக்கு அதிகரித்தது.
அதனால்தான் இத்தனை சர்ச்சைகளுக்குப் பிறகும்… 2024 ஆம் ஆண்டு அவருக்கு கல்வி அமைச்சர் பதவியை மீண்டும் வழங்கினார் மோடி. 2024 இல் இருபது ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதான் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க வந்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ‘நீட் முறைகேடு,… வெட்கக் கேடு வெட்கக் கேடு…’ என்று கோஷமிட்டனர்.
உத்தரப் பிரதேச பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராகவும் செயல்பட்டிருக்கிறார் தர்மேந்திர பிரதான். அவர் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, வேட்பு மனுவில் தன் மீது ஐந்து வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தனது அஃபிடவிட்டிலேயே குறிப்பிட்டிருக்கிறார் பிரதான்.
இரு வேறுபட்ட பிரிவினருக்கு இடையே மத அடிப்படையில், இன அடிப்படையில், பிறந்த பகுதியின் அடிப்படையில், மொழியின் அடிப்படையில் வெறுப்புணர்வையும், பகைமையையும் தூண்டும் வகையில் பேசியதாகவும்… பொது அமைதியைக் குலைக்கும் வகையில் பேசியதாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர் மீது அரசியல் போராட்ட வழக்குகளும் இருக்கின்றன. who is dharmendra pradhan

தனது 14 ஆவது வயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ், அமைப்பில் செயல்பட்டு வருகிறார் தர்மேந்திர பிரதான். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான நாக்பூர் சிந்தனையின் விளைவாகத்தான் இப்படியெல்லாம் மாநில சுயாட்சிக்கு எதிராகவும், ஒரு குறிப்பிட்ட மாநில மக்களையே அவமதிக்கும் வகையில் நாடாளுமன்றத்திலேயே பேசுகிறார் என்று பிரதானுக்கு எதிராக கண்டன கோஷங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. who is dharmendra pradhan