மகன் திருமண ரிஷப்சனா? அதிமுக மாநாடா?: வேலுமணி பிரம்மாண்டம்!

Published On:

| By vanangamudi

Velumani celebrates son vikas reception

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (மார்ச் 10) மாலை நடைபெறுகிறது. Velumani celebrates son vikas reception

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மகன் விஜய் விகாஷ் – தீக்‌ஷனாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது. அதிமுக முக்கிய தலைவர் ஒருவரது வீட்டு விழா என்பதால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் கலந்துகொள்ளவில்லை. தொடர்ந்து கடந்த மார்ச் 3ஆம் தேதி விஜய் விகாஷ் – தீக்‌ஷனா திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், குஷ்பு பாஜகவினர் பலரும் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் கலந்துகொண்ட நிலையில், செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் சிரித்த முகத்துடன் கைகுலுக்கி அண்ணாமலையை வரவேற்றது தமிழக அரசியலில் பேசு பொருளானது.

ஆனால் திருமண நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. அவரது மனைவியும் மகனும் கலந்துகொண்டனர்.

இது எடப்பாடி பழனிசாமி – வேலுமணி இடையே இருக்கும் நெருடலை உறுதி செய்திருக்கிறது என்று தமிழக அரசியலில் பேசப்பட்டது.

அதேசமயம், கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வார் என்று வேலுமணிக்கு நெருக்கமான வட்டாரம் கூறியது.

இந்தநிலையில் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளார் வேலுமணி.

கட்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்வதை போல ரிசப்ஷனுக்கான வேலையை செய்துள்ளார்.

அதாவது, கொடிசியா செல்வதற்கு முன் ஒரு கிமீ தொலைவில் இருந்து வழிநெடுக கொடிக்கம்பம், ராட்சத பேனர்கள், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். எடப்பாடி பழனிசாமி உருவப்படங்கள் அடங்கிய 100அடி உயர கட் அவுட் ஆகியவற்றை பார்க்கமுடிகிறது.

இந்நிலையில் ரிசப்ஷனில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் கோவை சென்றடைந்தார்.

இந்த ரிசப்ஷனில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு விருந்தளிக்க 27 வகையான உணவுகள் தயாராகி கொண்டிருக்கிறது. கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ.பி.சி ஆகிய மூன்று ஹால்களும் எடுக்கப்பட்டுள்ளன. முக்கிய விஐபிகளுக்கு தனி ஹால் ஒதுக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொடிசியா வளாகத்திலும் வெளியேயும் சுமார் 5000 கார்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொள்கிறார்.

முன்னாள் அதிமுக அமைச்சர்கள், பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என பல ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த ரிஷப்சன் எடப்பாடி – வேலுமணிக்கு இடையேயான நெருடல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என்றும் கூறுகிறார்கள் கோவை அதிமுக வட்டாரத்தில்.  Velumani celebrates son vikas recepti

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share