Operation Sindoor: கர்னல் சோபியா குரேஷியின் மதத்தை முன்வைத்து ம.பி. பாஜக அமைச்சரின் சர்ச்சை!

Published On:

| By Minnambalam Desk

மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா, ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதத்தை முன்வைத்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான Operation Sindoor ராணுவ நடவடிக்கை குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் இணைந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தவர் கர்னல் சோபியா குரேஷி. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக அமைச்சர் குனர் விஜய் ஷா பஹல்காம் தாக்குதல் குறித்து பேசுகையில், இந்திய பெண்களை விதவையாக்கியவர்களை அவர்களது மதத்தைச் சேர்ந்த பெண்களை வைத்தே (கர்னல் சோபியா குரேஷி இஸ்லாமியர்) அழித்துவிட்டார் பிரதமர் மோடி என கூறியிருந்தார்.

ADVERTISEMENT

மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷாவின் இந்த பேச்சுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சோபியா குரேஷி இஸ்லாமியர் என்பதால் பயங்கரவாதிகளின் சகோதரிதான் என்கிற தொனியில் விஜய் ஷா பேசியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் வீரர்களை, இப்படி மதத்தின் அடிப்படையில் பிரித்துப் பார்ப்பதா? என விஜய் ஷாவுக்கு கண்டனங்கள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து தமது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என வழக்கம் போல விளக்கம் தந்துள்ளார் விஜய் ஷா.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share