திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அண்ணா அறிவாலயம் வந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து நாளை தெரியவரும்.
வைகோ ஏன் இப்படியெல்லாம் கொஞ்ச நாளாக பேசிக் கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை. நேற்றைய தினம் கூட பேண்ட் சட்டை போட்டுக் கொண்டு, தலையில் முக்காடையும் போட்டுக்கொண்டு விவாசாயிகள் கூட்டத்தில் அவர் நடந்துகொண்டதை நாம் பார்த்தோம். தமிழகத்தில் அரசியலைத் தாண்டி எல்லோரும் மதிக்கக்கூடிய மூத்த தலைவராக இருப்பவர் கலைஞர். அவரை வைகோ இப்படியெல்லாம் ஒருமையில் பேசியிருப்பதை கேட்கும்போது அவர் மீதான கொஞ்ச நஞ்ச மரியாதையும் எனக்கு போய்விட்டது என்றுதான் சொல்வேன்” என்றார்.”