பாஜகவின் புதிய தேசிய தலைவர் நிதின் நபின் இன்று பதவியேற்பு

Published On:

| By Mathi

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) புதிய தேசியத் தலைவராக நிதின் நபின் (Nitin Nabin), இன்று முறைப்படி பதவியேற்கிறார்.

பாஜக தேசியத் தலைவர் பதவி காலம் 3 ஆண்டுகள். கடந்த 2020-ம் ஆண்டு பாஜக தேசியத் தலைவராக ஜேபி நட்டா தேர்வானார். அவரது பதவி காலம் 2023-ல் முடிவடைந்தது.

ADVERTISEMENT

ஆனால் 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் ஜேபி நட்டா தொடர்ந்து பதவி வகித்து வந்தார். இந்நிலையில் பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நிபின் அறிவிக்கப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர் நிதின் நபின். பீகார் மாநில அரசில் அமைச்சராகவும், ஐந்து முறை பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட நிதின் நபின், பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அமைப்புப் பதவிகளையும் வகித்துள்ளார். பாஜகவின் தேசிய செயல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் நிதின் நிபின்.

ADVERTISEMENT

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலில் நிதின் நிபின் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாகவும் 37 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து பாஜகவின் புதிய தேசியத் தலைவராக நிதின் நிபின் போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நிதின் நிபின், இன்று முறைப்படி பாஜக தேசியத் தலைவராக பதவியேற்க உள்ளார். இந்நிகழ்வில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

ADVERTISEMENT

பாஜகவின் தேசியத் தலைவர்கள் இதுவரை…

  • வாஜ்பாய் – 1980 முதல் 1986 வரை
  • எல்.கே.அத்வானி – 1986 முதல் 1991 வரை; 1993-1998; 2004-2005.
  • முரளி மனோகர் ஜோஷி – 1991 முதல் 1993 வரை
  • குஷாபாவ் தாக்ரே – 1998 முதல் 2000 வரை
  • பங்காரு லக்ஷ்மண் – 2000 முதல் 2001 வரை
  • கே.ஜனா கிருஷ்ணமூர்த்தி – 2001 முதல் 2002 வரை
  • எம்.வெங்கையா நாயுடு – 2002 முதல் 2004 வரை
  • ராஜ்நாத் சிங் – 2005 முதல் 2009 வரை; 2013- 2014.
  • நிதின் கட்கரி – 2010 முதல் 2013 வரை
  • அமித் ஷா – 2014 முதல் 2017; 2017-2020.
  • ஜே.பி.நட்டா – 2020 முதல் 2026 வரை.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share