நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு தேதி ஒத்தி வைப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

Re-examination cannot be conducted

நீட்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையல் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர்.

ADVERTISEMENT

மே மூன்றாம் தேதி தேர்வு நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் 2 லட்சம் மாணவ மாணவியர் உட்பட நாடு முழுவதும் சுமார் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நீட் தேர்வுக்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது. இந்நிலையில், நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in இல் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு ஹால் டிக்கெட் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share