இன்னைக்கு விசிக நடத்துன மாநாட்டுல பேசுன முதல்வர் ஸ்டாலின் திமுகவையும் விசிகவையும் பிரிக்க முடியாதுனு ரொம்ப ஆவேசமா பேசிட்டு இருந்தாரு…
இத டிவில பார்த்துட்டு இருந்த பக்கத்து சீட் பாண்டியன் லைட்டா ஒரு சிரிப்பு சிரிச்சான்.. எதுக்குடா இப்போ சிரிச்சேனு கேட்டா…
அதுக்கு அவன் “அண்ணே இங்க இவரு இப்படி பிரிக்க முடியாது தடுக்க முடியாதுனு பேசிட்டு இருக்காரு. அப்படியே கொஞ்சம் மேல பாத்தா, இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமா இருந்த நிதிஷ் குமாரு கூட்டணி தாவ இப்போ நீச்சலடிச்சிட்டு இருக்காராம்.. அத நெனச்சேன் சிரிச்சேன்”னு சொல்றான்.
அந்த தம்பிட்ட அது வேற… இது வேறனு சொன்னாலும்… “அரசியல இது சாதாரணமப்பா’னு சொன்ன கவுண்டமணி டயலாக் தான் ஞாபகம் வருது…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Mannar & company
வடமாநிலங்களிலும் பாஜக தோல்வியை சந்திக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜக அவங்களோட டார்கெட் தமிழ்நாடுதான் தலைவரே!

Kirachand
பிரதமர் மீது தமிழக மக்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர்! – ம.பி முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் ஆச்சே ஜி!
வசந்த்
“ராமர் கோயிலை காட்டி மக்களை திசை திருப்புகின்றனர்” -ஸ்டாலின்
நீங்க கிளாம்பாக்கத்துல பேருந்து நிலையம் கட்டி திசை திருப்பிய மாதிரியா?

ச ப் பா ணி
மெடிக்கல் ஷாப்புகள்.. டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அளவிற்கு பெரிதாவது நமது ஆரோக்கிய இழப்பின் குறியிடுகள்
தமிழன் சத்யா
திமுகவையும் விசிகவையும் பிரிக்க முடியாது! – ஸ்டாலின்
அப்படினா, வர நாடளுமன்ற தேர்தல்ல விசிகவுக்கு கொடுக்குற இரண்டு சீட்டும் பொதுதொகுதில நிற்கிற மாதிரி கொடுப்பிங்களா?!

Mannar & company™
சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும்
வித்தியாசங்கள் தெரிய வரும்போது
நம்முடைய சுதந்திரம் பறிபோயிருக்கும் என்பதுதான் உண்மை!
ச ப் பா ணி
போதை ஏறாதவன் மனநிலையும்
போன்ல சார்ஜ் ஏறாதவன் மனநிலையும்
ரெம்ப உக்கிரமா இருக்கும்

சரவணன். ????
Push, pull க்கு அப்புறம் அதிகமா குழம்பினது
குடியரசு தினமும் சுதந்திர தினமும் எந்த எந்த தேதிகள் ன்னு தான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
சாமியாரான தமன்னா: வைரலாகும் புகைப்படங்கள்!
”நிதிஷ்குமார் பிரதமர் ஆக வாய்ப்புள்ளது… ஆனால்” : அகிலேஷ் யாதவ்
