பியூட்டி டிப்ஸ் : முடி உதிர்வைத் தடுக்க சில எளிய மருத்துவக் குறிப்புகள்!

By Minnambalam

|

Published on 20 Feb 2024, 6:44 AM

மரபியல், ஹார்மோன் மாற்றங்கள், உணவு, வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படலாம். கடுமையான முடி உதிர்தலுக்கு வீட்டு வைத்தியம் எல்லாம் தீர்வு இல்லை என்றாலும், அவை ஆரோக்கியமான கூந்தலை ஊக்குவிக்கவும் முடி உதிர்வை ஓரளவு குறைக்கவும் உதவும்.

முடி உதிர்தலுக்கான சிறந்த வீட்டு வைத்தியங்களின் பட்டியலை தொகுத்துள்ளோம், இதை நீங்கள் வீட்டிலேயே எளிதாக முயற்சி செய்யலாம்.

ADVERTISEMENT

செம்பருத்திப்பூ மற்றும் செம்பருத்தி இலை, கறிவேப்பிலை, நெல்லிக்காய், கரிசாலை, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, மருதாணி, சின்ன வெங்காயம் – ஆகியவற்றுக்கு கூந்தலை வளர்க்கும் தன்மை உண்டு.

இம்மூலிகைகளை, கைப்பிடி அளவு எடுத்து, தனித்தனியாக இடித்துப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாறுகளை ஒன்று சேர்த்து, அதற்குச் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து, காய்ச்சி தைல பதத்தில் இறக்கி, வடிகட்டித் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி நன்கு வளரும்.

ADVERTISEMENT

முட்டை வெண் கரு, சின்ன வெங்காயச் சாறு, வெந்தயத்தை நன்கு ஊற வைத்து அரைத்த கலவை…

கற்றாழைச் சோற்றை எடுத்து அதை நன்கு கழுவிய பின் அரைத்த விழுது…

ADVERTISEMENT

செம்பருத்திப் பூ அல்லது இலைகளை அரைத்த விழுது…

கறிவேப்பிலையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து, தயிர் சேர்த்த கலவை…

இவற்றுள் ஏதேனும் ஒன்றை, வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறிய பிறகு குளிக்கலாம்.

உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீர் அல்லது வெங்காயம் வேக வைத்த தண்ணீரில் வாரம் ஒருமுறை தலையை அலசலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: முகத்தில் உள்ள ரோமங்கள்… வீட்டிலேயே நீக்க எளிய வழிகள்!

ஹெல்த் டிப்ஸ்: அதிக சத்தத்துடன் அடிக்கடி ஏப்பம்… தவிர்ப்பது எப்படி?

வறுமை ஒழிப்புக்கு ரூ.25,922 கோடி: பட்ஜெட்டில் புது திட்டம்!

தமிழக பட்ஜெட்: திமுக கூட்டணிக் கட்சிகள் பாராட்டு!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel