பெண்கள் சிலருக்கு முகத்தில் முடி இருக்கும். இவர்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று முடியை நீக்கினால் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். இந்த பிரச்சினைக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காணமுடியும்.
மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் வெந்நீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும்.
கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.
சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
குப்பமேனி இலையை தினமும் சாறு எடுத்து முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.
மஞ்சள் தூள், கடலை மாவு இரண்டையும் சம அளவில் எடுத்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் முடி உள்ள இடங்களில் தடவி அப்படியே காயவிடுங்கள். நன்றாக காய்ந்த பின்னர் முடி முளைத்திருக்கும் திசைக்கு எதிர்திசையாக கையால் மெதுவாக சுரண்டி எடுக்கவும். பின்னர் முகத்தை நன்றாக கழுவினால் படிப்படியாக முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: வாய்வு தொல்லையால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான தீர்வு!
பியூட்டி டிப்ஸ்: இனி நகங்களைப் பராமரிப்பது ஈஸி!
ஹெல்த் டிப்ஸ்: எதற்கெடுத்தாலும் தைலம் தடவும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?
பியூட்டி டிப்ஸ்: விஸ்வரூபம் எடுக்கும் பொடுகுத்தொல்லை.. வீட்டிலேயே இருக்கு சிகிச்சை!