தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவது பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
வெறும் வயிற்றில் தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஊட்டச் சத்துக்களின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றான நெல்லிக்காயில் அதிக அளவு இயற்கை ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி இருப்பதால் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், திசுக்களை வளர்க்கவும், நச்சுகளை அகற்றவும் உதவுகிறது. தினமும் ஒரு நெல்லிக்காயை மெல்லுவதன் பல நன்மைகளை விரிவாக பார்போம்.
ஊட்டச்சத்துக்கள்
100 கிராம் நெல்லிக்காயில் 44 கி கலோரிகள், 10.18 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 0.88 கிராம் புரதம், 0.58 கிராம் கொழுப்பு, 4.3 கிராம் நார்ச்சத்து, 252 மி.கி வைட்டமின் சி, 25 மி.கி கால்சியம், 0.31 மி.கி இரும்புச்சத்து மற்றும் 20 மி.கி பாஸ்பரஸ் உள்ளன
நோய் எதிர்ப்பு சக்தி
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. இதனால் உடலில் உள்ள தொற்றுகள் மற்றும் பாதிப்புகளை எதிர்த்து போராடுகிறது., காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சளி மற்றும் இருமல் பாதிப்புகளிடம் இருந்தும் பாதுகாக்கிறது
செரிமான கோளாறுகள்
நெல்லிக்காய் செரிமான நொதிகளை தூண்டி செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடலின் மொத்த குடல் இயக்கச் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. ஊட்டச்சத்துக்கள் உறிஞ்ச தூண்டுவதோடு மலச்சிக்கலை தடுக்கிறது.
சருமம் மற்றும் தோல் ஆரோக்கியம்
நெல்லிக்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. சுருக்கங்களைக் குறைக்கிறது மற்றும் ஒட்டுமொத்த சரும அமைப்பை மேம்படுத்துகிறது.
முடி வளர்ச்சி
நெல்லிக்காயை சாப்பிட்டு வருவது முடி உதிர்தலைக் குறைக்கிறது. முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது, அதிக இரும்புச்சத்துள்ள நெல்லிக்காய் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்கிறது.
எடை குறைப்பு
நெல்லிக்காய் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு நச்சுக்களை அகற்றுகிறது. இதனால் உடல் எடை குறைகிறது. அதிக அளவில் வைட்டமின் சி உள்ளதால் கொழுப்பை எரிக்க உதவுகிறது. பசியையும் குறைக்கிறது, இது ஒரு இயற்கையான எடை இழப்புக்கு உதவியாக அமைகிறது.
பக்க விளைவுகளும் கூட ஏற்படலாம்
நெல்லிக்காயில் நார் சத்துக்கள் உள்ளதால் அதிக அளவு இதனை எடுத்துக் கொண்டால் சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. நெல்லிக்காய் அதிக அளவு எடுத்துக் கொண்டு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நெல்லிக்காய் உடலுக்கு முடி வளர்ச்சிக்கும் வறட்சி ஏற்படுத்தும். இதனால் பொடுகு சரும வெடிப்பு போன்ற பாதிப்புகள் உண்டாக்கலாம். எனவே மருத்துவரின் ஆலோசனை பெற்று உங்களுக்கு தகுந்தாற்போல் பயன்படுத்துவது நல்லது.
