அனைவராலும் விரும்பப்படக்கூடிய தந்தூரி சிக்கனை ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே எப்படி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
அசைவ உணவுப் பிரியர்களின் முக்கிய உணவாக சிக்கன் உள்ளது. சிக்கனில் அதிக அளவு புரதம் இருப்பதால் உடல் ஊட்டச்சத்துக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சிக்கனை பொதுவாக நாம் குழம்பு வைத்தோ, வறுத்தோ அல்லது பொறித்தோ சாப்பிடுவதுதான் வழக்கம். ஆனால், இப்போது தந்தூரி சிக்கன் வகைகளை பெரிதளவு விரும்பும் சூழல் உள்ளது. ஏனெனில் மற்ற சிக்கன் சமையல் போன்று இதற்கு அதிகளவு எண்ணெய் தேவையில்லை என்பதுதான் முதன்மைக் காரணம்.
உண்மையில், சுவையான தந்தூரி சிக்கன் இந்திய அசைவ உணவுகளில் ஒரு தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளது. அதன் வாசனை, ஆழமான மசாலா சுவை மற்றும் ஜூசி ஆகியவை இளைஞர்களை அதிகம் கவருகிறது. சரியான மசாலா பொருட்கள் மற்றும் சரியான முறையுடன் செய்தால் தந்தூரி சிக்கன், ஹோட்டல் பாணி தந்தூரி சிக்கனைப் போலவே சிறப்பாகவும் சுவை கொடுக்கிறது. நீங்களும் தந்தூரி சிக்கனை வீட்டிலேயே செய்ய விரும்பினால், அதன் செய்முறையைக் கற்றுக்கொள்வோம்.
தந்தூரி சிக்கன் செய்வது எப்படி? ஒரு நல்ல தரமான கோழிக் கறியை தந்தூரிக்கு ஏற்றது போல வெட்டி வாங்கிக் கொள்ளுங்கள். சிக்கனை நன்கு கழுவி, முழுமையாக உலர விட வேண்டும். கறிக்குள் மசாலா ஆழமாக இறங்க கோழி துண்டுகளில் சிறிய கீறல்களை போட வேண்டும். இதன்பிறகு தந்தூரி சிக்கனின் முக்கிய தேவையான மரேனைட்டை தயார் செய்யவும். ஒரு கிண்ணத்தில், தயிர் (Curd), இஞ்சி-பூண்டு விழுது (Ginger Garlic Paste), சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள், மிளகாய் மற்றும் சுவைக்க உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். விரும்பினால், சீரகம், கருப்பு மிளகு மற்றும் கிராம்பு போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலாப் பொருட்களையும் சேர்க்கலாம். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து மிதமான அளவுள்ள மரேனைட்டை தயார் செய்ய வேண்டும்.
சிக்கனை மரேனைட் செய்யவதற்காக மசாலாவை ஒவ்வொரு கோழித் துண்டிலும் சமமாகப் பூசிவிட வேண்டும். மரேனைட் செய்யப்பட்ட கோழி இறைச்சித் துண்டுகளை ஒரு மூடிய பாத்திரத்தில் வைத்து குறைந்தது 4 முதல் 6 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்க வேண்டும். மரேனைட் செய்ய அதிக நேரம் வைக்கும்போது போது, சிக்கன் மிகவும் சுவையாக இருக்கும்.
இப்போது தந்தூரி அடுப்பு அல்லது கிரில்லில் குறைந்த தீயில் மரேனைட் செய்யப்பட்ட இறைச்சி துண்டுகளை இட வேண்டும். முதலில், சிக்கனை பாதி வேகும்படி சமைக்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் விட்டு மீண்டும் சமைக்கவும். இதன்மூலம் உள்ளே ஒரு ஜூசி சிக்கனையும், வெளியே சற்று மொறுமொறுப்பாகவும் இருக்க வைக்கும்.
இப்போது சூடான சுவையான ஹோட்டல் ஸ்டைல் தந்தூரி சிக்கன் தயார். அதில் சிறிது வெண்ணெய் அல்லது நெய்யை தடவி, எலுமிச்சை, வெங்காயம் மற்றும் புதினா சட்னியுடன் சூடாக பரிமாறலாம்.
