இளநரையை (Gray Hair) நீங்கி முடி கருப்பாக, தலைமுடிக்கு ஊட்டமளிக்க வெந்தயம் பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.
வயதாகும்போது முடி நரைப்பது குறிப்பாக 50 – 60 வயதுகளில் வெள்ளை முடி ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால், 20 – 25 வயதிலேயே முடி நரைத்துவிட்டால் அது கவலைக்குரிய விஷயமாகும். பரம்பரை ஜீன், ரசாயனம், ஊட்டச்சத்து குறைபாடு என இளநரை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
இளநரையை நீக்கி கருமையான முடிகளை பெற நாம் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. நமக்கு கிடைக்கும் இயற்கையான பொருட்களைக் கொண்டே நரைமுடியை (premature grey hair) கருமையாக்க முடியும். குறிப்பாக நரைமுடி நீங்க வெந்தயம் வீட்டு வைத்தியத்தை பயன்படுத்துவது சிறந்தது. வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து, முடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்க உதவுகிறது.
வெந்தய விதை மாஸ்க்
சுமார் 2-3 தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலையில் அதை விழுதாக அரைக்க வேண்டும். அதனுடன் நெல்லிக்காய் சாற்றைச் சேர்த்து முடியில் தடவவும். இது நரைமுடியைக் (Fenugreek mask For Hair) கருமையாக்கவும் , முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்தக் கலவையை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
வெந்தயம் எண்ணெய்
1 கப் கடுகு அல்லது தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் அரை கப் வெந்தயத்தை (Fenugreek Hair oil) சேர்க்க வேண்டும். வெந்தயம் பழுப்பு நிறமாக மாறும் வரை குறைந்த தீயில் வதக்க வேண்டும். ஆறிய பிறகு எண்ணெயை வடிகட்டி, வாரத்திற்கு இரண்டு முறை தலைமுடியில் நன்றாகத் தடவவும். இது நரை முடியைக் கருமையாக்க உதவுகிறது.
வெந்தயம் + மருதாணி
ஒரு தேக்கரண்டி வெந்தயப் பொடியை மருதாணியுடன் கலந்து உங்கள் தலைமுடியில் தடவ வேண்டும். இது சிறந்த ஊட்டச்சத்தை அளிக்கிறது. மருதாணியுடன் (Fenugreek + Henna) கலந்த வெந்தயத்தைத் தடவுவது, முடியை வேர்களிலிருந்து கருமையாக்க உதவுகிறது.
வெந்தயத்தில் ஊட்டச்சத்துக்கள் கூந்தலுக்கு ஒரு சிறந்த இயற்கை கண்டிஷனராகச் செயல்படுகின்றன. மருதாணி வறண்ட முடி, பொடுகு (Dandruff removal) மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
தேங்காய் எண்ணெய் + வெந்தயம்
2 தேக்கரண்டி வெந்தய விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அவற்றை விழுதாக அரைக்க வேண்டும். அதனுடன் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை (Coconut oil + fenugreek) சேர்த்து, நன்றாகக் கலந்து, முடி மற்றும் உச்சந்தலையில் தடவி, உலர விட்டு, மென்மையான ஷாம்பு கொண்டு அலசி விட வேண்டும்.
வெந்தய விதைகள் மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையானது முடி வளர்ச்சியை (Hair growth) ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இளம் வயதில் தோன்றும் நரை முடி பிரச்சனையையும் நீக்குகிறது.










