உடலுக்கு நன்மையளிக்கும் புரோட்டீன் தோசை செய்வது எப்படி? இதோ ரெசிபி..

Published On:

| By Santhosh Raj Saravanan

make a healthy protein dosa with bengalgram

கொண்டைக் கடலை, ரவை பயன்படுத்தி இயற்கையான முறையில் புரோட்டீன் தோசை செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.

நமது வாழ்க்கை முறை மாற்றம், மோசமான உணவுப் பழக்கங்கள் உள்ளிட்டவை காரணமாக உடல்நலக் கோளாறுகள் வருகின்றன. இதனைத் தவிர்க்க உடற்பயிற்சி, உணவு முறை மாற்றம் அவசியமாகிறது. நமது தமிழ்நாட்டில் மக்களின் காலை, இரவு உணவுகளில் இட்லி, தோசைதான் மிக முக்கிய பங்கு உள்ளது. தோசை என்பது அரிசி, உளுந்து மாவில் தயாரிக்கப்படுகிறது. இதில் அதிக மாவுச் சத்துக்கள் இருப்பதால் பலரும் தவிர்க்கிறார்கள். மாவுச் சத்து அதிகமாக சாப்பிடுவது சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம் என்று நம்புவதால் தோசையை எடுத்துக்கொள்ள தயங்குகிறார்கள்.

ADVERTISEMENT

நாம் இங்கு ஊறவைத்த கொண்டைக்கடலை மற்றும் ரவை (semolina) சேர்த்து செய்யப்படும் ஒரு புரதத் தோசையை தயாரிக்கலாம். புரதம் அதிகமாக இருப்பதால் நாம் மாவுச் சத்து தொடர்பான கவலைகளில் இருந்து விடுபட்டுவிடலாம். புரத தோசை தயாரிப்பது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் (protein dosa ingredients)
  • 200 கிராம் ஊறவைத்த கொண்டைக்கடலை
  • 100 கிராம் ரவை
  • ஒரு தேக்கரண்டி சீரக விதைகள்
  • 3  சிவப்பு மிளகாய்கள்
  • தேவையான அளவு உப்பு
  • கொத்தமல்லி இலைகள்
  • கறிவேப்பிலை
செய்முறை

கொண்டைக் கடலையை இரவு முழுவதும் அல்லது 5 – 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு ஊறவைத்த கொண்டைக் கடலையுடன் (Chickpeas) ரவை, சீரகம், காய்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் உப்பு சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மென்மையான விழுதாக மாறும் வரை அரைக்கவும். மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் நீராகவோ இல்லாமல் இருக்க, தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். அதன் பதம் வழக்கமானா தோசை மாவைப் போல இருக்க வேண்டும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிய பிறகு, பொடியாக நறுக்கிய புதிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்க வேண்டும். கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை தோசையின் நறுமணத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், செரிமானத்திற்கும் உதவுகின்றன.

ADVERTISEMENT

வழக்கமான தோசை சுட அவற்றை 8-10 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். ஆனால் இந்த கொண்டைக்கடலை மற்றும் ரவை தோசையின் சிறப்பு (specialty of rava dosa) என்னவென்றால், இதை உடனடியாகச் செய்யலாம். மாவை மணிக்கணக்கில் ஊற வைக்கத் தேவையில்லை. அதை அரைத்துவிட்டு, உடனடியாக தோசை செய்யத் தொடங்கலாம். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து அதில் லேசாக எண்ணெய் தடவி, சில துளிகள் தண்ணீர் சேர்த்து வெப்பநிலையைச் சமன் செய்யவும். பிறகு தோசைக் கல் நடுவில் மாவை ஊற்றி தோசையை வார்த்தெடுக்கவும். இதனை உங்களுக்கு பிடித்த சட்னி, சாம்பாருடன் பரிமாறலாம்.

புரத தோசை நன்மைகள்

புரத தோசை உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கும் நன்மை பயக்கும். கொண்டைக்கடலையில் உள்ள புரதம் தசை வளர்ச்சிக்கு (protein dosa benifits) நல்லது, அதே சமயம் ரவை இதனை இலகுவாக வைத்திருக்கிறது. எந்தவிதமான பதப்படுத்திகளோ அல்லது சேர்க்கைகளோ இல்லாததால், இதுவே மிகவும் தூய்மையான உணவுப் பொருளாக உள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share