Madurai Meenakshi Amman Temple Consecration: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறும் நிலையில் இன்று முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 285 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை (செப்டம்பர் 17) நடைபெற உள்ளதை முன்னிட்டு, பக்தர்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பான, சீரான மற்றும் தங்குதடையற்ற போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று அன்று KCBT ( சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்) முதல் மதுரை வரை 50 சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கான தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்:
கோயம்புத்தூர் – 30 பேருந்துகள்
அருப்புக்கோட்டை – 25 பேருந்துகள்
விருதுநகர் – 10 பேருந்துகள்
திருப்பூர் – 30 பேருந்துகள்
சிவகாசி – 30 பேருந்துகள்
தேனி – 30 பேருந்துகள்
ராமநாதபுரம் – 30 பேருந்துகள்
ராஜபாளையம் – 30 பேருந்துகள்
திண்டுக்கல் – 20 பேருந்துகள்
மதுரை மாநகரப் பகுதியில் திருமங்கலம்
மேலூர்
திருப்புவனம்
வாடிப்பட்டி
நத்தம்
பூவந்தி மற்றும் உசிலம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தலா 20 பேருந்துகள் இயக்கப்படும்.
