மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : வேட்பாளர்களை அறிவித்த திமுக!

Published On:

| By Kavi

தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மீண்டும் தமிழக அரசியல் அனல் பறக்க தொடங்கியுள்ளது. இந்த இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக இன்று (செப்டம்பர் 9) அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் வழக்கு காரணமாக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. 

ADVERTISEMENT

இந்த நிலையில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இரண்டு தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் ஆலோசனை நடைபெற்றது.  இதில், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, மதுராந்தகம் தனி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் பரந்தாமனும், 

ADVERTISEMENT

தாராபுரம் தனி சட்டப்பேரவை தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share