மாநாடு வெற்றிபெற வேண்டும் – விஜயகாந்த்

Published On:

| By Balaji

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியின் சிறப்பு மாநாடு ஏப்ரல் 10-ம் தேதி செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு தேமுதிக தொண்டர்கள் கூட்டணி கட்சி தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசியலில் மக்கள் விரும்பும் மாற்றத்தை உருவாக்க அமைந்திருக்கும் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி சார்பில், ஏப்ரல் 10-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே மாமண்டூரில் தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில், கூட்டணிக் கட்சி தலைவர்களான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

அதனால், மாநாட்டுக்கு தேமுதிக – மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் குடும்பத்தொடு கலந்துகொண்டு மாநாட்டை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share