புதுச்சேரியில் ஏப்ரல் 6-ந் தேதி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழகம், புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலும் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 16 இடங்களிலும் திமுகவும் கூட்டணி கட்சிகளும் 14 இடங்களிலும் போட்டியிட முடிவு எட்டப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்ததை திரும்பப் பெற மறுத்ததால் குழப்பம் நீடிக்கிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நாளை மறுநாள் ஏப்ரல் 4-ந் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6-ந் தேதி புதுச்சேரியில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அதே நாளில் புதுச்சேரியில் ராகுல் காந்தியும் ஸ்டாலினும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
