விஜய்யின் ‘ஜனநாயகன்’ காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை!

Published On:

| By Pandeeswari Gurusamy

Jananayagan

விஜய்யின் ஜனநாயகன் பட காட்சிகளை பகிர்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் ஜனநாயகன். பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி பிரகாஷ்ராஜ் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்துள்ளார். பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் இதுவே தனது கடைசி படம் என அறிவித்து இருந்தார். இதனால் இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்து காணப்பட்டது.

ADVERTISEMENT

இந்த படத்திற்கு தணிக்கை வாரியம் ஆட்சேபணை தெரிவித்த நிலையில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் இதுவரை படம் வெளியாகவில்லை தொடர்ந்து பல கட்ட போராட்டத்திற்கு பிறகு ஜனநாயகன்படத்தை மறு தணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு பட தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பி வைத்தது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு பின்னர் ஏப்ரல் 30ஆம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விஜய் தனது ஜனநாயகம் படத்திற்கு ஆளும் தரப்பு பிரச்சனை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் படத்தில் விஜய்யின் அறிமுகம் மற்றும் இறுதி காட்சிகள் இணையத்தில் கசிந்தது சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக முழு படமும் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து ஜனநாயகன் படத்தின் கசிந்த காட்சிகள் மற்றும் படத்தின் லிங்கை பகிர்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் படக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கே.வி.என் புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர், வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிவைட், ஓடிடி மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

‘ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள், சில நபர்களால் சட்டவிரோதமாக அணுகப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, பல மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு சமூக ஊடகத் தளங்கள் மூலம் டிஜிட்டல் கசிவு ஏற்படும் தீவிர அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன.

ஜன நாயகன் திரைப்படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளிகளை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றுவது, மீண்டும் பதிவிடுவது. சேமிப்பது அல்லது பரப்புவது ஒரு கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறவாகும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

ஜன நாயகன் திரைப்படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து அனுப்பிய நபருக்கு எதிராக ஏற்கனவே உரிய சட்ட நடவடிக்கையைத் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய சட்டவிரோதப் பரப்பலில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜன நாயகன் தொடர்பான கசிந்த உள்ளடக்கத்தை எந்தவொரு டிஜிட்டல் அல்லது சமூக ஊடகத் தளம் வழியாகவும் எந்த வகையிலும் பதிவிறக்கம் செய்யவோ, பெறவோ, சேமிக்கவோ, அனுப்பவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவரும் அதன் விளைவுகளுக்குத் தங்கள் சொந்தப் பொறுப்பில், உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share