காட்டுமன்னார்கோயில் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ.யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

 மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

 காட்டுமன்னார்கோயில் வாக்காளர்கள்

ADVERTISEMENT

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

சாதி வாரியான வாக்காளர்கள்

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

காட்டுமன்னார்கோவில் தொகுதி.. இந்த தொகுதியில தான் போட்டி போடுவதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் முதல்ல அறிவிச்சாரு.

முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள் அதிருப்தி தெரிவிச்சாங்க.

அதுக்கு அப்புறமாக காங்கிரஸில் இருக்கக் கூடிய மறைந்த தலித் தலைவர் இளையபெருமாளின் இளைய மகன் ஜோதிமணியை விசிக வேட்பாளரா திருமாவளவன் அறிவிச்சாரு.. இங்கே சிட்டிங் எம்.எல்.ஏ. விசிகவின் சிந்தனை செல்வன். இப்ப செய்யூர் தொகுதியில போட்டியிடுகிறார். போன டைம் 2021-ல் 10,565 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது அதிமுக.

இங்கே அதிமுக வேட்பாளராக அன்பு சோழன் நிறுத்தப்பட்டுள்ளார்.

நமது சர்வே முடிவுபடி, 

திமுக (விசிக) – 47 %
அதிமுக – 37%
தவெக- 11%
நாதக- 4% வாக்குகள் பெறும்

திமுக கூட்டணியில் விசிக வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

வெற்றி வாய்ப்பு யாருக்கு..? சிதம்பரம் | Chidambaram | Minnambalam Mega Survey Results 2026
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share