தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
கம்பம் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

கம்பம்.. திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் ஜெயிச்ச தொகுதி. இப்ப சிட்டிங் எம்.எல்.ஏ.வான கம்பம் ராமகிருஷ்ணன் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
இந்த முறையும் கம்பம் நா.ராமகிருஷ்ணன் திமுக வேட்பாளராக களம் காண அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்டிகே ஜக்கையன் போட்டியிடுகிறார்.
அதிமுகவில் சீனியர்களில் ஒருவர் ஜக்கையன். எம்பியாக, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக இருந்தவர். 2016 தேர்தலில் திமுகவின் கம்பம் ராமகிருஷ்ணனை தோற்கடிச்சு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக – 46%
அதிமுக –37%
தவெக- 11%
நாதக-5% வாக்குகள் பெறும்
திமுக கம்பம் நா.ராமகிருஷ்ணன் வெற்றி பெறவாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
