தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
பெரம்பலூர் வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

பெரம்பலூர் தொகுதி.. இந்த தொகுதியும் திமுக, அதிமுக மாறி மாறி ஜெயிச்சுகிட்டு இருக்கிற தொகுதி.. 2021-ல் திமுகவின் பிரபாகரன் 31,034 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இளம்பை தமிழ்ச்செல்வனை தோற்கடிச்சிருந்தாரு
இந்த முறை டாக்டர் ஜெயலட்சுமி இங்கே திமுக வேட்பாளராக களம் காண்கிறார். அதிமுகவில் மீண்டும் இளம்பை தமிழ்ச்செல்வனே போட்டியிடுகிறார்.
2011, 2016-ல் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றவர்தான் இளம்பை தமிழ்ச்செல்வன்.
நமது சர்வே முடிவுபடி,
திமுக – 46%
அதிமுக – 31%
தவெக-14 %
நாதக- 8% வாக்குகள் பெறும்
திமுக நல்ல லீடிங்கில் முன்னிலை வகிக்கிறது. டாக்டர் ஜெயலட்சுமி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
