தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.
மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.
இதில் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…
ஆண்டிப்பட்டி வாக்காளர்கள்

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்



சாதி வாரியான வாக்காளர்கள்

2021 – சட்டமன்ற தேர்தல் வெற்றி

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

ஆண்டிபட்டிம், எம்ஜிஆர் தொகுதி என அறியப்பட்ட தொகுதி. 1980-ல் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார்.
1984-ல் எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நிலையில் ‘படுத்துக் கொண்டே’ ஜெயிச்ச தொகுதி என சொல்லப்பட்டதுதான் ஆண்டிபட்டி தொகுதி.
எம்ஜிஆர் மறைவுக்கு பின் அவரது மனைவி விஎன் ஜானகி அம்மையார் இங்கே போட்டியிட்டு 3-வது இடம்தான் கிடைச்சது. 2002 இடைத்தேர்தலில் இங்கே ஜெயலலிதா போட்டியிட்டு ஜெயிச்சாங்க. 2006-லும் இங்கே ஜெயலலிதா போட்டியிட்டு ஜெயிச்ச தொகுதி.
2011, 2016-ல் தொடர்ந்து அதிமுக வேட்பாளராக ஜெயிச்ச தங்க தமிழ்ச்செல்வன் இப்போது திமுகவின் தேனி எம்.பியாக இருக்கிறார்.
போன 2021-ல் திமுகவின் மகாராஜன் வெற்றி பெற்றார். இந்த முறையும் சிட்டிங் எம்.எல்.ஏ.வான மகாராஜன் போட்டியிடுகிறார்.
போன முறை தோல்வி அடைந்த லோகிராஜன் மீண்டும் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இங்கே களம் எப்படி இருக்கிறது எனில் திமுக- அதிமுக இடையே நெருக்கமான போட்டி இருக்கிறது எனலாம்
நமது சர்வே முடிவுபடி,
திமுக –37 %
அதிமுக –40%
தவெக- 16%
நாதக-6% வாக்குகள் பெறும்
அதிமுக முன்னிலை வகிக்கிறது
கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.
அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்
