ADVERTISEMENT

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை : 10 மணி நிலவரம்!

Published On:

| By christopher

கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 10 மணி நிலவரப்படி 108 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 13) காலை 8 மணி முதல்  எண்ணப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

முதலில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளைத் தொடர்ந்து பதிவான வாக்குகள் 8.30 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

கள நிலவரப்படி, மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காலை 10 மணி நிலவரப்படி 8 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. இதில் காங்கிரஸ் 108 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 85  தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 26 இடங்களிலும், பிற கட்சிகள் 5  தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

ADVERTISEMENT
karnataka election result 10 am update
தேர்தல் ஆணையத்தின் 10 மணி நிலவரம்

தேர்தல் ஆணையம் அளித்துள்ள 202 தொகுதிகளுக்கான தகவலின் படி, காங்கிரஸ் 104 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 70 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 23 இடங்களிலும், பிற கட்சிகள் 2  தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

கிறிஸ்டோபர் ஜெமா

ADVERTISEMENT

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் உத்தரவு!

ஆஸ்கர் விருது குறித்து ’டைம்’ இதழில் தீபிகா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share