கல்யாண் ஜுவல்லர்ஸ் சித்தி பிரேமலதா – அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

ஒருவழியாக மக்கள் தேமுதிக பிறந்துவிட்டது. தேமுதிக என்ன லட்சியத்துக்காகத் தொடங்கப்பட்டதுன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடியே, மக்கள் தேமுதிக என்ற கட்சி வந்துருச்சு. என்னதான் சண்டே லீவுன்னாலும் இந்த என்டர்டெயின்மெண்டெல்லாம் மிஸ் பண்ண முடியுமா?. இது இல்லாம ஓட்டு கேட்கப்போன இடத்தில் எல்லோரும் இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டுருங்க” என அதிமுக-வுக்கு ஓட்டுக் கேட்டு, சீமானும் தன் பங்குக்கு காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு. தேமுதிக குறித்த ட்விட்களும், சீமான்குறித்து ஒரு முகநூல் ஸ்டேட்டஸும்.

// ‏@thoatta

ADVERTISEMENT

கட்சிவிட்டு ஓடிப்போறவங்களை தொடர்ந்து, தமிழ்நாட்டுல காதலனோட எந்தப் பொண்ணாவது ஓடிப்போனாலும் கலைஞரத்தான் குற்றம் சொல்வாருபோல வைகோ 😉 //

// @naaraju

ADVERTISEMENT

இன்னிக்கு பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் வைகோ, தேமுதிக செயற்குழு பத்தி உளறுவாரா இல்ல…மதேமுதிக உதயம்பற்றி உளறுவாரா..? டெலிகேட் பொசிஷன்.//

// ‏@zer0by0

ADVERTISEMENT

மநகூ – அதிமுக B டீம்

பாஜக – அதிமுக C டீம்

பாமக – அதிமுக D டீம்

நாம் தமிழர் – அதிமுக E டீம்

மதேமுதிக – அதிமுக F டீம்

திமுக – அதிமுக G டீம்//

// ‏@IamKanal

கேப்டன்தான் எங்களுக்குத் தலைவர். ஆனா, அவர் சொல்றத கேக்கமாட்டோம். கட்சிக் கொள்கை சூப்பர் #மதேமுதிக //

// @_thara__

கலைஞர்: இங்க வாங்க! நம்மகிட்டயும் ஒரு தேமுதிக இருக்கு. பிடிச்சா மதேமுதிக-க்கு ஓட்டுப் போடுங்க. இல்ல கிடந்துட்டு போகுது. //

// ‏@rpeter_paul

அண்ணியாக இருந்த பிரேமலதா சித்தியாக மாறியதால் மதேமுதிக துவக்கம்.

கல்யாண் ஜுல்லர்ஸ் மாதிரி எவனோ இன்னொரு கடைய திறந்திருக்கான், சித்தியாக்க//

// ‏@ghillisri

மக்கள் தேமுதிக உதயம்…..இதுலயே தானை தலிவரின் சாணக்கிய தானம் தெரிஞ்சிக்கோங்க மக்களே….//

//@imdganesan

மதேமுதிக பற்றி தேமுதிக-வின் செய்தித் தொடர்பாளர் வைகோ ஏதாவது சொல்லிட்டாரா? //

// ‏@bewithsureshm

திக, திமுக, அதிமுக, மதிமுக, லதிமுக, தேமுதிக, மதேமுதிக, அடுத்து என்ன தமாமதேமுதிக வா?? :)))) #தேர்தல்2016//

//‏@blackhawk3271

மதேமுதிக தொடங்கின அதை விமர்சனம் செய்யும் மநகூ-வினர், வைகோ திமுக-வில் இருந்து பிரிந்து வந்துதான் மதிமுக தொடங்கினார் என்பதை மறந்துவிடுகிறார்கள்//

//@tamvji

சந்திரகுமார் ஏன் மதேமுதிக என பெயர் வைத்தாரோ அழகாக திமுகவின் தேமுதிக என்றே வைத்திருக்கலாம் #சந்திரகுமார்_மதேமுதிக//

//‏@dharmagk

தலைவர, ரமணாவா மாத்தாம விடமாட்டாராட்டுக்கு இந்த சந்திரகுமாரு #மதேமுதிக //

//@saysatheesh

தமாகா-வை அதிமுக கிட்டத்தட்ட ஒடைச்சிருச்சு.

ஆனா, வைகோ இன்னும் அதுக்குப் பொங்கல

கவனிச்சீங்களா? //

//@sweetvelan

முகமது கஜினி, சிலை உடைப்பவர்னா,

அண்ணன் வைகோ கட்சிகளை உடைப்பவர் //

// @NKS_arafath

ஒரு கட்சி ஆபிசுக்குள்ள யாரு போனா அடுத்த நாள் அந்தக் கட்சி உடையுதோ அவர்தான் வைகோ. நவ் த.மா.கா டமால்.

வைகோ வெரி டேஞ்சரஸ் பெர்சன்ப்பா…//

*******************************************************************************************

Vijayabhaskaran Karunanithi

2 hrs ·

இரட்டை மெழுகுவர்த்தி என்பதற்குப் பதில், இரட்டை இலை எனச்சொல்லி வாய்தவறி வாக்குக் கேட்ட சீமான்!

வாயி தவறுதா, எங்க அண்ணனுக்கா? போங்கடா அங்கிட்டு, ஒரு மணி நேரத்துக்கு லெந்தா ஈழ கதையை த்ரில்லிங்கா ஒரு மிஸ்டேக் இல்லாம புளுகுறவரு என் தலைவன். ஒரு வார்த்தையில ஸ்லிப் ஆகுறவரா அவரு!

இரட்டை இலையும், இரட்டை மெழுகுவர்த்தியும் ஒண்ணு. அறியாதவன் வாயில கன்னு!

-லாக் ஆஃப்”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share