தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஜான் சத்யன் நியமனம்!

Published On:

| By Kavi

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தலைமை செயலாளர் சாய் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில்,
“பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (சட்டம் 46 / 2023)-இன் பிரிவு 18, உட்பிரிவு (1)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் கலந்தாலோசனையுடன், சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த மே 18ஆம் தேதியே ஜான் சத்யன் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அன்றைய அறிவிப்பு தற்காலிகமானது என்றும் இன்று முதல் நிரந்தரமாக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஜான் சத்யன் நியமிக்கப்படுகிறார் என்றும் உயர்நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன .

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share