விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பியதை அடுத்து, அவரது சொந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். Jhulasan express joy over Sunita Williams successful Splashdown
கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும், விண்கலம் பழுது காரணமாக கடந்த 9 மாதம் அங்கேயே தங்க நேரிட்டது.
இந்த நிலையில் திட்டமிட்டபடி ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பத்திரமாக இன்று அதிகாலை பூமிக்கு திரும்பியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸின் சொந்த கிராமமான ஜூலாசனில் மக்கள், அவர் பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியதற்கு நன்றி தெரிவித்து அதிகாலையில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு கொண்டாட்டகள் களைகட்டியுள்ளன.
தங்களது மகிழ்ச்சியை ஆடிப் பாடியும், பட்டாசு வெடித்தும் அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக, சுனிதாவின் உறவினரான தினேஷ் ராவல், நேற்று அகமதாபாத்தில் அவரது பாதுகாப்பான வருகைக்காக யாகம் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.