மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் இன்று மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு சந்திரகுமார், எங்கள் கட்சிக்கு இந்தத் தொகுதி வேண்டும், அந்தத் தொகுதி வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்குத் தேவையான ஒரு அங்கீகாரம். அதற்கு என்ன செய்யவேண்டும் கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் தெரியும். அவர்கள் எங்களைவிட பெரிய அரசியல் அனுபவம் உள்ளவர்கள். அதனால், அவர்கள் சொல்வதை இதில் நாங்கள் கேட்டுக்கொள்வோம். தேமுதிக யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதற்கு ஆவணங்கள் எதுவும் காட்டமுடியாது. சாதாரணமாக பார்ப்பவர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றாகவே தெரியும். நான் கேப்டனை எதிர்த்து நிற்கும் முடிவையெல்லாம் எடுக்கமாட்டேன். நான் இப்போதும் அவர்மீது மரியாதை வைத்துள்ளேன்” என்றார்.,”
திமுக சொல்வதைக் கேட்போம்: சந்திரகுமார்
By Balaji
|
Published on 12 Apr 2016, 12:00 AM
உண்மையின் மூச்சு உங்கள் விரலில்
மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel








