கரூர் மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரான எம்சிஎஸ் சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் நான்காவது கிராஸ் பகுதியில் உள்ள அரசு ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ் சங்கர் ஆனந்தின் அலுவலகம் மற்றும் அவரது வீடு ஆகிய இரண்டு இடங்களில் முதலில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ் மற்றும் சக்தி மெஸ் ஆகிய இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் சிவா டெக்ஸ்டைல் உள்ளிட்ட பல இடங்களில் ஏற்கனவே வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில், இன்று மேலும் 4 இடங்களில் சோதனை நடைபெறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
