கவினுடன் மோதும் சந்தானம்… பாக்ஸ் ஆபிஸ் ‘கிங்’காக மாறப்போவது யார்?

Published On:

| By Manjula

தமிழில் நடிகர் சந்தானம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து, பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

ஷங்கர் தயாரிப்பில் ‘அறை எண் 305ல் கடவுள்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சந்தானம் கடந்த வருடம் ‘டிடி ரிட்டன்ஸ்’ என்ற வெற்றித் திரைப்படத்தை கொடுத்தார்.

தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான கிக், 80ஸ் பில்டப் போன்ற திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இதையடுத்து ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.

அடுத்ததாக சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இங்க நான் தான் கிங்கு’. இதன் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

அதன்படி படம் வருகிற மே மாதம் 10-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதே போல் ‘டாடா’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கவின் நடிக்கும் திரைப்படம் ஸ்டார்.

‘பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இளன் படத்தை இயக்கி உள்ளார். கவின், லால், கீதா கைலாசம், அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன் போன்ற பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படமும் அதே தேதியில் ரிலீஸ் ஆகிறது.

கோலிவுட்டில் நீண்ட நாட்களாகப் படங்கள் ஹிட் ஆகாத நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களில் எது வெற்றி பெறும்? என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

பிரியங்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திருச்சி: துரைமுருகன் எச்சரிக்கை…தடுமாறிய அதிமுக!

அரண்மனை – 4, ஸ்டார் படங்கள் தள்ளிப்போனதன் பின்னணி என்ன?

Tillu Square: ஓடிடி ரிலீஸ் எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share