kavin-sundar-c

அரண்மனை – 4, ஸ்டார் படங்கள் தள்ளிப்போனதன் பின்னணி என்ன?

சினிமா

ஏப்ரல் 26 ஆம் தேதி ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம், மற்றும் சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விஷால் கொடுத்த ஒரு பேட்டி திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர், சினிமாவுக்கே சொந்தக்காரர் போல் நடக்கிறார்.

அவர் எனது நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டபோது அதைத் தள்ளிப்போடுங்கள் என்றார்.

Rathnam

அதை நான் கேட்கவில்லை. இப்போது ரத்னம் படம் வெளியாகும்போதும் தொந்தரவு செய்வார் என்று பேட்டி கொடுத்தார்.

 

இதனால் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ரெட்ஜெயண்ட் வெளியீடாக வரவிருக்கும் அரண்மனை 4 படத்தை ஏப்ரல் 26 அன்றே வெளியிட்டால், விஷால் சொன்னதுபோல் ரத்னம் படத்துக்கு இடையூறாக அரண்மனை 4 படத்தை வெளியிட்டுவிட்டார்கள், என்கிற விமர்சனங்கள் வரும்.

எனவே, சுந்தர்.சியே நடிகர் விஷாலைத் தொடர்பு கொண்டு, ஏப்ரல் 26 இல் நாங்கள் வரவில்லை ஒரு வாரம் தள்ளி மே 3 ஆம் தேதி வருகிறோம் என்று சொல்லிவிட்டாராம்.

star

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் கவின், அதிதி போஹன்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ஸ்டார்.

இந்தப் படம் மே 3 ஆம் தேதி வெளியாகவிருந்தது. இப்போது அரண்மனை 4 அந்தத் தேதியில் வெளியாக இருப்பதால், ஸ்டார் படம் மே 10 ஆம் தேதி வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார் படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனமே வெளியிடும் என்று ஏற்கனவே கூறப்பட்டது.

ரெட்ஜெயண்ட் நிறுவனம் பட வெளியீட்டுக்கு முன் கொடுக்கும் அட்வான்ஸ் குறைவு என்பதால், படத்தின் தமிழ்நாடு உரிமையை அவுட்ரேட் அடிப்படையில் விற்க தயாரிப்பு தரப்பு முயற்சியை மேற்கொண்டிருப்பதால், ரிலீஸ் தேதியை மாற்றியிருப்பதாக திரையரங்க வட்டாரத்தில் கூறுகின்றனர்.

-ராமானுஜம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காவி நிறத்திற்கு மாறிய ’டிடி நியூஸ்’ லோகோ!

Tillu Square: ஓடிடி ரிலீஸ் எப்போது?

அயோத்தி நடிகைக்கு அடுத்தடுத்து ‘குவியும்’ வாய்ப்புகள்..!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *