ஜாய் ஆலுக்காஸ் ஜூவல்லரிக்கு இந்தியா முழுவதும் 120 கிளைகள் உள்ளன. ஆனால், கேரளத்தில் 10 கிளைகள்தான் இருக்கிறது. அதற்கு காரணம் அரசியல் அல்ல, இங்குள்ள மக்களின் மனநிலையே என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் கூறியுள்ளார். Joy Alukkas about kerala people
கேரளாவில் நிதி தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற ஜாய் ஆலுக்காஸ் யூடியூப் சேனல் ஒன்று அளித்த பேட்டியில் கூறியதாவது, ”கேரளாவில் யாராவது ஒருவர் புதியதாக ஒரு விஷயத்தை செய்ய முனைந்தால், அதை தடுக்கும் மனநிலை கொண்ட மக்கள் அதிகம். இதுதான் கேரள மக்களின் முக்கிய பிரச்னை. 2002 ஆம் ஆண்டு கேரளாவுக்கு வந்தேன். சில ஜூவல்லரி ஷாப்களை திறந்தேன். ஆனால், அப்போதுதான் நான் உணர்ந்தேன். இந்த இடம் வர்த்தகத்துக்கு தகுந்த இடம் அல்ல என்பதை. உடனே, கேரளாவுக்கு வெளியே சென்றேன். இப்போது, இந்தியாவில் 120 ஜாய் ஆலுக்காஸ் கடைகள் உள்ளன. 10 மட்டுமே கேரளத்தில் உள்ளது. Joy Alukkas about kerala people
எனது சொந்த ஊர் திருச்சூர். சொந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஆசை உள்ளது. அங்கே, மருத்துவமனை கட்ட நினைத்தேன். ஆனால்,இங்கு நீங்கள் ஒரு திட்டத்தை கொண்டு வந்தால், உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களே அதை எதிர்ப்பார்கள். ஒவ்வொரு விஷயத்துக்கும் இடையூறு ஏற்படுத்துபவர்களே இங்கு அதிகம். அதே வேளையில், அந்த மருத்துவமனையை தமிழ்நாட்டில் கட்டுவது எளிது. இப்போது, கொஞ்சம் கேரள மக்களின் இந்த மன நிலை மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன். கேரள குழந்தைகளுக்கு ஒன்று நான் சொல்ல ஆசைப்படுகிறேன். இங்கிருந்து வெளியேறி உங்கள் வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளுங்கள்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.