இந்தியாவை குறிவைப்பது நியாயமே இல்லை: டொனால்ட் டிரம்ப்-க்கு மத்திய அரசு பதில்

Published On:

| By Mathi

Modi Trumph

இந்தியாவுக்கு கூடுதல் விதிக்கப்படும் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் (India Vs US) எச்சரிக்கை விடுத்துள்ளது ‘நியாயமற்றது’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய பொருட்கள் மீது அதிகமான வரி விதித்த டிரம்ப் தற்போது இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகளை விமர்சித்துள்ளார். தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது; இதனை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் இந்தியா அதிக லாபம் பெறுகிறது. இந்தியாவுக்கு, உக்ரைன் மீதான யுத்தத்தில் கொல்லப்படுவோர் பற்றி கவலை ஏதும் இல்லை. இதனால் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்கள் மீதான வரியை மேலும் உயர்த்துவேன் என மிரட்டல் விடுத்திருந்தார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் நலனைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்; இந்தியாவையே அமெரிக்கா குறிவைப்பது நியாயமும் அல்ல. இந்தியாவை குற்றம் சாட்டுகிற நாடுகளும் ரஷ்யாவுடன் நட்புறவில்தான் உள்ளன; அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share