இடம் பத்தலையா? தரை முழுக்க ஒரே குப்பையா? அறையை பெருசாக்க உதவும் ‘Vertical Space ‘ விதி!

Published On:

| By Santhosh Raj Saravanan

how to use vertical space rule small rooms clutter

“அறையில காலை வைக்கக்கூட இடமில்ல, அதுக்குள்ள எப்படித்தான் இவ்வளவு பொருள் சேர்ந்துச்சோ…” – சிறிய வீடுகளில் அல்லது சிறிய அறைகளில் வசிப்பவர்கள் தினமும் புலம்பும் ஒரு முக்கியமான விஷயம் இது. தரையில் பெட்டிகளையும், கூடைகளையும் அடுக்க அடுக்க, அறை பார்ப்பதற்கு இன்னும் குட்டிப் பெட்டி போல மாறிக்கொண்டே இருக்கும்.

இந்த இடநெருக்கடிப் பிரச்சினைக்கு இன்டீரியர் டிசைனர்கள் பயன்படுத்தும் ஒரு சூப்பர் விசித்திரமான மற்றும் எளிய வழிதான் வெர்டிகல் ஸ்பேஸ்’ விதி (The Vertical Space Rule). அதாவது, தரையை விட்டுவிட்டு, உங்களது அறையின் சுவர்களை (செங்குத்து இடத்தை) புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி அறையை எப்படிப் பெரியதாக மாற்றுவது என்பதற்கான சில நச்சுனு வழிகள் இதோ!

ADVERTISEMENT
சுவர்களைப் பயன்படுத்தும் 3 எளிய வழிகள்

1. மிதக்கும் அலமாரிகள் (Floating Shelves): தரையிலிருந்து இடத்தை ஆக்கிரமிக்கும் பெரிய கபோர்டுகள் அல்லது ரேக்குகளுக்குப் பதிலாக, சுவர்களில் மிதக்கும் அலமாரிகளைப் பொருத்துங்கள்.

  • இவை காற்றில் மிதப்பது போல இருப்பதால், தரையின் பரப்பளவு (Floor space) அப்படியே காலியாக இருக்கும்.
  • இதில் உங்களது புத்தகங்கள், சிறிய செடிகள், அல்லது அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை அழகாக அடுக்கிக் கொள்ளலாம்.

2. சுவர் கொக்கிகள் (Wall Hooks): ஆபீஸ் முடிந்து வந்ததும் பேக், கோட், தொப்பி அல்லது சாவிகளை நாற்காலியிலோ அல்லது தரையிலோ வீசி எறிவதுதான் அறை குப்பையாக மாறுவதற்குக் குட்டி அஸ்திவாரம்.

ADVERTISEMENT
  • சுவர்களில் அல்லது கதவுக்குப் பின்னால் ஸ்டைலான மரத்தாலான அல்லது மெட்டல் கொக்கிகளை மாட்டுங்கள்.
  • பொருட்களைப் பயன்படுத்திய உடனே அந்தந்த கொக்கிகளில் தொங்கவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாலே தரையில் இருக்கும் 50% குப்பைகள் காணாமல் போய்விடும்.

3. கதவுக்குப் பின்னால் இருக்கும் மேஜிக் (Over-the-Door Organizers): நமது அறையின் கதவுகளுக்குப் பின்னால் இருக்கும் இடம் பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் வீணாகவேப் போகிறது.

  • அங்கு பாக்கெட்டுகள் கொண்ட ‘ஓவர்-தி-டோர் ஆர்கனைசர்களை’ மாட்டி வைக்கலாம்.
  • இதில் உங்களது செருப்புகள், அழகுசாதனப் பொருட்கள், சார்ஜர்கள் அல்லது குட்டி குட்டி அத்தியாவசியப் பொருட்களைப் போட்டு வைக்கும் போது, அவை வெளியில் தெரியாமல் மிக நேர்த்தியாக இருக்கும்.

ஒரு புத்திசாலித்தனமான இன்டீரியர் டிப்: மனிதர்களின் பார்வை தரையிலிருந்து சுவரை நோக்கி செங்குத்தாக மேலே செல்லும்போது, ஒரு சிறிய அறை கூட பார்ப்பதற்குப் பிரம்மாண்டமாகவும், விசாலமாகவும் இருக்கும் என்ற ஒரு பிம்பத்தை (Illusion) கண்முன்னே உருவாக்குகிறது. எனவே, பொருள்களை எப்போதும் ‘அகலமாக’ அடுக்காமல் ‘உயரமாக’ அடுக்குங்கள்!

ADVERTISEMENT
வெர்டிகல் ஸ்பேஸ் விதியின் முக்கிய நன்மைகள்
  • சுலபமாகப் பெருக்கலாம்: தரையில் பொருட்கள் இல்லாதபோது அறையைக் கூட்டுவதும், துடைப்பதும் மிக மிக எளிதாகிவிடும்.
  • பொருட்கள் எளிதில் கிடைக்கும்: தேட வேண்டிய பொருட்கள் அனைத்தும் கண் மட்டத்திலேயே சுவர்களில் அடுக்கி வைக்கப்படுவதால், அவசர நேரத்தில் தேடும் டென்ஷன் மிச்சமாகும்.
  • மன அமைதி: குப்பைகள் இல்லாத வெட்டவெளியான தரைப்பரப்பு, உங்களது மனதிற்குள் ஒருவித அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் கொடுக்கும்.
Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share