சுவையான, சத்தான கொய்யா சட்னி செய்வது எப்படி? – இதோ ரெசிபி

Published On:

| By Santhosh Raj Saravanan

How to make Tasty and nutritious guava chutney

ஒரே விதமான சட்னியை சாப்பிட்டு பழக்கப்பட்ட நாம், தற்போது புதிய கொய்யா சட்னி எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம்.

பொதுவாகவே நாம் அனைவரும் சட்னி என்றாலே காரச் சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி என ஒரே மாதிரியான சட்னிகளை சாப்பிட்டு பழகியிருப்போம். இந்த வகை சட்னிகளில் ஊட்டச்சத்துகள் குறைந்த அளவே இருப்பதோடு, சுவைக்காகவே சாப்பிட வேண்டியது இருக்கும். இவற்றிற்கு பதிலாக ஒரு மாறுதலுக்கு நாம் புதிய வகை சட்னிகளை செய்து பார்க்கலாம். குறிப்பாக கொய்யாப் பழத்தை கொண்டு தயாரிக்கும சட்னியில் ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் குறைவே இருக்காது.

ADVERTISEMENT

கொய்யாவில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது. ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எடை மேலாண்மைக்கு உதவுவதோடு, சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது மற்றும் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும் உதவும்.

கொய்யா சட்னி எப்படி செய்வது?

ADVERTISEMENT

தேவையான பொருட்கள்:

  • நன்கு பழுத்த கொய்யாப் பழம் – 2
  • பச்சை மிளகாய் – 2 அல்லது 3 (காரத்திற்கேற்ப)
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு
  • புளி அல்லது எலுமிச்சை சாறு – தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் – ஒரு கைப்பிடி
  • உப்பு – தேவையான அளவு
  • தாளிப்பு – கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் எண்ணெய்

செய்முறை: கொய்யாப் பழத்தை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதிலுள்ள விதைகளை நீக்கிவிடுவது சட்னி மென்மையாக இருக்க உதவும். மிக்ஸி ஜாரில் நறுக்கிய கொய்யா துண்டுகள், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.

ADVERTISEMENT

அதன்பிறகு ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். இறுதியாக சுவை பார்த்துவிட்டு தேவைப்பட்டால் கூடுதலாக எலுமிச்சை சாறு அல்லது புளி சேர்த்தால் சுவைத்தால் அற்புதமாக கொய்யா சட்னி இருக்கும். இதனை தோசை அல்லது இட்லிக்கு சுடச் சுட பரிமாறலாம்.

கொய்யா சட்னி இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு மிக சுவையாக இருக்கும். பழுத்த பழங்களை பயன்படுத்தினால் சட்டினி இனிப்பு சுவையுடன் இருக்கும். கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒரே மாதிரியான சட்னிகளை சாப்பிட்டு வருபவர்கள் இதனை முயற்சி செய்து பாருங்கள் சூப்பராக அமையும்.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share