சுவையான சிக்கன் சமோசா.. ஹோட்டல் ஸ்டைலில் செய்வது எப்படி?

Published On:

| By Santhosh Raj Saravanan

How to make delicious chicken samosa hotel style

சுவையான சிக்கன் சமோசா செய்வது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.

நமது மாலைப் பொழுதுகளில் ஏதேனும் ஒரு சிற்றுண்டி சாப்பிட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக அவற்றை நாம் வீடுகளிலேயே தயாரித்துவிடலாம். குறிப்பாக மாலை நேர சிற்றுண்டியாக காரமான, மொறுமொறுப்பான சமோசாவை விட சிறந்த தேர்வு வேறு இல்லை. ஆனால், வழக்கமான காய்கறிகள், உருளைக் கிழங்கை உள்ளடக்கிய சமோசாவையே சாப்பிட்டு இருப்போம். ஆனால், இங்கு சுவையான சூப்பரான சிக்கன் சமோசா (Chicken Samosa) எப்படி செய்வது என்று உங்களுக்கு சொல்லித் தருகிறோம்.

ADVERTISEMENT

தேவையான பொருட்கள் (Samosa Ingredients)

*1 கப் மைதா மாவு

ADVERTISEMENT

* 1 தேக்கரண்டி ஓமம்

* 2-3 தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய்.

ADVERTISEMENT

* நன்றாக அரைத்த கோடி இறைச்சி – 250 கிராம்

*  வெங்காயம் – நறுக்கியது

* இஞ்சி-பூண்டு விழுது

* 2-3 பச்சை மிளகாய்

* மிளகாய் தூள்

* கரம் மசாலா

* சுவைக்கு உப்பு

* கொத்தமல்லி இலை

சிக்கன் சமோசா செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஓமம், உப்பு மற்றும் நெய்யை சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். கெட்டியான மாவு பதம் வரும் வரை சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். மாவை சுமார் 20-30 நிமிடங்கள் ஊற விட வேண்டும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய்களைச் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அரைத்த கோழி இறைச்சி (Minced chicken meat) , மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிண்டவும். சிக்கன் முழுமையாக வெந்ததும், கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, தனியாக எடுத்து வைத்து ஆறவிட வேண்டும்.

சுவையான சமோசா ரெடி

அடுத்து ஊறவைத்த மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல தயார் செய்யவும். அவற்றை இரண்டாக வெட்டி, கூம்பு வடிவில் மடிக்கவும். தயார் செய்த சிக்கன் மசாலாவை அதில் நிரப்பி, ஓரங்களில் சிறிதளவு தண்ணீர் தடவி இறுக்கமாக மூடவும். சமோசாக்களை சூடான எண்ணெய்யில் (Delicious evening snack) போட்டு பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் பொறிக்க வேண்டும். பிறகு அதனை எடுத்து எண்ணெய் நீங்கும் வரை வைத்திருந்து பிறகு சாப்பிடலாம். கடைகளில் கிடைக்கும் அதே அற்புதமான சுவையுள்ள சமோசா இப்போது உங்கள் வீட்டிலேயே தயாராக உள்ளது.

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share