சாவின் எல்லையில்.. நேபாளத்தில் இருந்து உயிர் தப்பிய 21 தமிழர்களின் நெஞ்சை பதற வைக்கும் தகவல்!

Published On:

| By Mathi

At Death's Door.. Heart-Wrenching Information of 21 Tamils Who Survived from Nepal

நேபாளத்தில் இருந்து 21 தமிழர்கள் நேற்று இரவு (ஆகஸ்ட் 28) பாதுகாப்பாக தமிழகம் திரும்பினர்.

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய இந்தியர்களில் 21 பேர் நேற்று டெல்லிக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். கும்பகோணம் டிராவல் ஏஜென்சி மூலம் 57 பேர் கைலாய யாத்திரைக்காக நேபாளம் சென்றனர். இவர்களில் 21 பேர் மட்டும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

ADVERTISEMENT

டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அனைவரையும் வரவேற்றார். பின்னர் 21 தமிழர்களையும் தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், தென்னரசு உள்ளிட்டோர் சந்தித்தனர்.

டெல்லியில் இருந்து 21 பேரையும் தமிழ்நாடு அரசு பாதுகாப்பாக சென்னைக்கு அனுப்பி வைத்தது. சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் ஆனந்த், சரத்குமார் மற்றும் நேபாளம் சென்ற யாத்ரீகர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

ADVERTISEMENT

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய யாத்ரீகர்கள், “எங்கள் கண்முன்னேதான் பேரலை வந்து வாரி சுருட்டிக் கொண்டு போனது. எங்களுக்கு முன் நின்றிருந்த வேன்கள், கார்களை அப்படியே விழுங்கியது அந்த அலை. அதே நேரத்தில் எங்களது வேனை சுற்றிய கார்கள் முட்டி மோதியதில் எங்கள் வேனுக்கு பாதுகாப்பாக நின்றன. எங்களுக்கு பின்னால் வந்த கும்பகோணம் யாத்ரீகர்கள் பேருந்து அப்படியே தலைகீழாக கவிழ்ந்தது.

எங்கள் வேனில் இருந்து சட்டென இறங்கிய ஆண்கள் சிலர் பக்கத்தில் இருந்த உயரமான மலைக்கு வேகமாக ஏறினர். அங்கிருந்து துணிகள், சேலைகள் மூலம் ஒவ்வொருவரையும் மலைக்கு மேலே இழுத்து உயிரைக் காப்பாற்றினர்.

ADVERTISEMENT

சாவின் எல்லையில் நின்றுவிட்டு வந்திருக்கோம். சாவை நேரில் பார்த்துவிட்டு வந்திருக்கிறோம். நேபாள அரசும் ராணுவமும் மத்திய அரசும் தமிழக அரசும் எங்களை பாதுகாப்பாக மீட்டுவிட்டது” என்றனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share