தமிழ்நாட்டில் வருகிற மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் பதட்டமான வாக்குச் சாவடிகள் அனைத்தையும் கண்டறிந்து பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருக்கும் 16 சட்டசபைத் தொகுதிகளுக்கான பதட்டமான வாக்குச் சாவடிகளை கண்டறியும் பணி நடைபெற்றது. இதில், மொத்தம் 418 வாக்குச் சாவடிகளை பதட்டம் நிறைந்தவை என மாவட்டத் தேர்தல் அலுவலகம் கண்டறிந்துள்ளதால், இதற்கான பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
சென்னை: 418 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
