வயிறு பிரச்சனை தீரும்.. பெருஞ்சீரகம் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?

Published On:

| By Santhosh Raj Saravanan

Gut Health To Digestion benefits of fennel

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக காண்போம்.

நீங்கள் அடிக்கடி வாயுத்தொல்லை, அஜீரணம் மற்றும் அமிலத்தன்மையால் அவதிப்படுகிறீர்களா?.. பெருஞ்சீரகம் (Fennel) வீட்டு வைத்தியம் பெரிய செரிமானப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது. நமது வீடுகளில் பெருஞ்சீரகம் புத்துணர்ச்சிக்காகவும் செரிமானத்திற்கு உதவும் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து செரிமான அமைப்பை வலுப்படுத்தி வாயுத்தொல்லையைத் தடுக்க உதவுகின்றன.

ADVERTISEMENT
அமிலத்தன்மையை குறைக்கும் பெருஞ்சீரகம்

உணவுக்குப் பிறகு அரை தேக்கரண்டி பெருஞ்சீரக விதைகளை (Fennel Seeds) மென்று சாப்பிடுவது வயிற்றைக் குளிர்ச்சியடையச் செய்து, அமிலத்தன்மையைக் குறைக்கிறது. இது வாயுவை வெளியேற்றவும், வயிற்றில் ஏற்படும் கனமான உணர்வைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், பெருஞ்சீரக விதைகள் வாய் துர்நாற்றத்தையும் நீக்கி, உங்களுக்குப் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.

எளிதாக செரிமானமாகும்

பெருஞ்சீரகத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் செரிமான நொதிகளைத் தூண்டி, உணவை வேகமாகவும் எளிதாகவும் ஜீரணிக்கச் செய்கின்றன. இதனால்தான் உணவகங்களில் உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் பெரும்பாலும் தரப்படுகிறது. பெருஞ்சீரக விதைகளை மெல்லுவது வாயில் உமிழ்நீர் உற்பத்தியை அதிகரித்து, செரிமான செயல்முறையைத் (Easily digestible) தூண்டுகிறது. கல்லீரல் மற்றும் பித்தப்பை செரிமான நொதிகளைத் தீவிரமாகச் சுரக்கவும் பெருஞ்சீரகம் உதவுகின்றன. இதனால் உணவு விரைவாக செரிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

ADVERTISEMENT
வாய்ப்புண்களை குணப்படுத்த உதவுகிறது

பெருஞ்சீரக விதைகள் வாய் புண்கள் அல்லது கொப்புளங்களைக் குணப்படுத்தவும் (cure mouth ulcers) உதவுகின்றன. பெருஞ்சீரக விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள், உடல் செல்களைச் சேதப்படுத்தி, முதுமையை விரைவுபடுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து உடலைப் பாதுகாக்கின்றன.

மன அழுத்தம் குறைய உதவி புரிகிறது

பெருஞ்சீரக விதைகளை மெல்லுவது மன அழுத்தத்தைக் குறைக்கவும் (reduce stress) உதவிபுரிகிறது. பெருஞ்சீரகத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற கனிமங்கள் உள்ளன, அவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share