சென்னையில் இன்று (மே 6 ) காலை ஒரு சவரன் தங்கம் ரூ.1,840 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.400 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய போர் பதற்றங்கள், தங்கம் மற்றும் வெள்ளியின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை ஒரு கிராம் வெள்ளி மீண்டும் ரூ.5000 வரை உயர்ந்துள்ளது
தற்போதைய தங்கம் விலை
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 230 உயர்ந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.50 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் இன்று காலை ரூ.1,840 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ. 400 வரை உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.190 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ. 50 உயர்ந்து ரூ.11,770க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போதைய வெள்ளி விலை
சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்த நிலையில் மாலையில் மேலும் ரூ. 5 உயர்ந்துள்ளது. இதைத்தொடரந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.275 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி இன்று மாலை மேலும் ரூ.5000 உயர்ந்து ரூ.2,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை நிலவரம்
| 5-5-2026 | 1,10,560 |
| 4-5-2026 | 1,12,000 |
| 3-5-2026 | 1,12,000 |
| 2-5-2026 | 1,12,000 |
| 1-5-2026 | 1,11,360 |
| 30-4-2026 | 1,12,800 |
| 29-4-2026 | 1,11,200 |
| 28-4-2026 | 1,12,800 |
| 27-4-2026 | 1,13,840 |
| 26-4-2026 | 1,13,600 |
கடந்த 10 நாட்களில் ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்
| 5-5-2026 | 265 |
| 4-5-2026 | 270 |
| 3-5-2026 | 270 |
| 2-5-2026 | 270 |
| 1-5-2026 | 265 |
| 30-4-2026 | 270 |
| 29-4-2026 | 260 |
| 28-4-2026 | 265 |
| 27-4-2026 | 270 |
| 26-4-2026 | 270 |
