பூவே உனக்காக, சூரியவம்சம், மாரீசன் பட தயாரிப்பாளர் காலமானார்!

Published On:

| By Kavi

நடிகர் ஜீவாவின் தந்தையும், பிரபல தயாரிப்பாளாருமான ஆர்.பி.சவுத்ரி விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

புது வசந்தம் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவர் ஆர்.பி.சவுத்ரி. சூப்பர்குட் பிலிம்ஸ் என்ற தனது நிறுவனத்தின் மூலம் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி, ஜில்லா மற்றும் எவர்கிரின் படங்களான சூரியவம்சம், நட்டாமை, தனது மகன் ஜீவா நடிப்பில் வெளியான ஈ, கச்சேரி ஆரம்பம், ஆசை ஆசையாய், தித்திக்குதே, ரௌத்திரம் மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும், சமுத்திரம், நீ வருவாய் என, உன்னை கொடு என்னை தருவேன், புத்தம் புதிய பயணம் சேரன் பாண்டியன், மாரீசன் என பல படங்களை தயாரித்தவர் ஆர்.பி.சவுத்ரி. இவரது நிறுவனம் சுமார்100 படங்களை தயாரித்துள்ளது.

ADVERTISEMENT

இவரது பூர்வீகம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் ஆகும். அடிகடி தனது சொந்த ஊருக்கு சென்று வருவது ஆர்.பி.சவுத்ரிக்கு வழக்கம்.

இந்த முறை அங்கு சென்றபோது இன்று விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

ADVERTISEMENT

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாளை (மே 6) அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share