ADVERTISEMENT

நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்.. இன்று ஒரே நாளில் இரண்டு முறை சரிந்த தங்கம் விலை நிலவரம் இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஏப்ரல் 2) ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2,400 குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலகளாவிய போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை சரிவை சந்தித்து உள்ளது.

ADVERTISEMENT

தற்போதைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்த நிலையில பிற்பகலில் ரூ.200 சரிந்து ரூ.13,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.800 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ. 1600 சரிந்து ரூ.1,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இன்று 18 கேரட் தங்கம் இன்று காலை ரூ.75 குறைந்த நிலையில் பிற்பகலில் ரூ.180 குறைந்து ரூ.11,455க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போதைய வெள்ளி விலை

சென்னையில் இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 10 குறைந்த நிலையில் பிற்பகலில் மாற்றம் இல்லாமல் ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
1-4-20261,12,400
31-3-20261,09,360
30-3-20261,10,160
29-3-20261,09,280
28-3-20261,09,280
27-3-20261,07,440
26-3-20261,06,800
25-3-20261,08,800
24-3-20261,06,000
23-3-20261,06,720

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

1-4-2026265
31-3-2026250
30-3-2026255
29-3-2026250
28-3-2026250
27-3-2026245
26-3-2026260
25-3-2026260
24-3-2026250
23-3-2026250
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share