அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை நிலவரம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (மே 14) ஒரு சவரன் தங்கம் ரூ.400 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதற்கிடையில் ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம் எதிரொலியாக இறக்குமதி வரியை 6 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்த 9 சதவிகிதி வரி உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையல் தங்கம், வெள்ளி விலையிலும் கடும் தாக்கம் எதிரொலிக்கிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.15,050க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒரு சவரன் தங்கம் ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 கேரட் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ. 12,570க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.315க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5000 குறைந்து ரூ. 3,15,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம்
13-5-20261,20,000
12-5-20261,14,640
11-5-20261,12,800
10-5-20261,13,200
9-5-20261,13,200
8-5-20261,13,200
7-5-20261,13,200
6-5-20261,12,800
5-5-20261,10,560
4-5-20261,12,000

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம்

13-5-2026320
12-5-2026300
11-5-2026285
10-5-2026280
9-5-2026280
8-5-2026280
7-5-2026275
6-5-2026275
5-5-2026265
4-5-2026270
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share