21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்க தடை – டாஸ்மாக்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றவுடன், மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசின் நடவடிக்கை பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், சிறார்களிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்தப் புகார்களின் அடிப்படையில், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகம் இருந்தால், அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஏதேனும் அடையாள ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே மது விற்பனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share