‘தளபதி’ விஜய் படத்தில் அறிமுகமாகும் ‘இளம் நடிகை’

Published On:

| By Manjula

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘The Greatest Of All Time’ திரைப்படத்தில் ‘தளபதி’ விஜயுடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வரும் ‘GOAT’ படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதன்படி ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அபியுக்தா(16) இப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்து வருகிறாராம். விஜய் இப்படத்தில் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

GOAT Update Abyukta Vijay Sister

இதில் அப்பா விஜய் வில்லனாக நடிக்க அவருக்கு துணை வில்லனாக மோகன் நடிக்கிறாராம். மார்ச் முதல் வாரத்தில் ‘GOAT’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றினை படக்குழு வெளியிடவிருக்கிறது.

இதையடுத்து தன்னுடைய 69-வது படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இப்படத்தினை தெலுங்கின் டிவிவி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது படத்தின் இயக்குநரை தயாரிப்பு நிறுவனமும், விஜயும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எஸ்.வி.சேகருக்கு சிறைத் தண்டனை!

தனுஷின் ‘ராயன்’ கதை இதுதான்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share