தனுஷ் இயக்கி, நடிக்கும் அவரின் 5௦-வது படத்துக்கு ‘ராயன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் தனுஷுடன் இணைந்து துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக தனுஷ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக்கினை இன்று (பிப்ரவரி 19) படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் தனுஷ் கையில் ரத்தக்கறை படிந்த கத்தியுடன் முறுக்கிக்கொண்டு நிற்கிறார். அவருக்கு பின்னால் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் இருவரும் கைகளில் கத்தியுடன் எட்டி பார்க்கின்றனர். இதனை வைத்து பார்க்கும்போது படத்தில் வன்முறைக்கு பஞ்சமே இருக்காது என்பது தெரிகிறது.
முதல்முறையாக தனுஷும் வன்முறையை களமாகக்கொண்ட கதையினை இயக்கி நடித்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் கதை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இதில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் மூவரும் அண்ணன்-தம்பிகளாக நடித்துள்ளனராம்.
பாஸ்ட் புட் கடை நடத்தி வரும் மூவரும் அடிப்படையில் கேங்ஸ்டர்களாக இருக்கின்றனர். மூவரும் இப்படி ஆனதற்கு காரணம் என்ன? என்பதே இப்படத்தின் கதையாம். எது எப்படியோ படத்தில் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் நிறைந்திருக்கும் என்பது மட்டும் கண்கூடாகத் தெரிகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாம் தமிழர் சின்னம்: தேர்தல் ஆணையரிடம் மனு!
விரைவில் நெமிலி குடிநீர் நிலையம் : பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!
Comments are closed.