எஸ்.வி.சேகருக்கு சிறைத் தண்டனை!

Published On:

| By Kavi

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்துக் கடந்த 2018ஆம் ஆண்டு நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதள பக்கங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தின் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2019ஆம் ஆண்டு எம்பி, எம்எல்ஏக்கள் மீதான சிறப்பு நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று (பிப்ரவரி 19) தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயவேல், “புகார் குறித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அமைதியைச் சீர் குலைத்தல், மிரட்டல் விடுத்தல் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது” என தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக எஸ்.வி.சேகர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதால், தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தனுஷின் ‘ராயன்’ கதை இதுதான்?

நாம் தமிழர் சின்னம்: தேர்தல் ஆணையரிடம் மனு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment