ஹெல்த் டிப்ஸ்: உடல் பருமனைக் குறைக்க… இந்த உணவுகளைத் தவிருங்கள்!

Published On:

| By Selvam

உடல் பருமனை உண்டாக்குவதற்கு மருத்துவரீதியான விஷயங்கள், மரபியல் கோளாறுகள், ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மைப் பங்கு உணவுக்குத்தான் உண்டு. நாம் என்ன சாப்பிடுகிறோம், எப்படிச் சாப்பிடுகிறோம் என்பது முக்கியம்.

வயதுக்கேற்றாற்போல சாப்பிட வேண்டும். டீன் ஏஜில் உள்ள ஒருவரது உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) வேறு. நடுத்தர வயதிலுள்ளவரின் உடலின் வளர்சிதை மாற்றம் வேறு.

நாம் சாப்பிடும் உணவின் கலோரிகள் எப்படி எரிக்கப்பட்டு எப்படி நமக்கு எனர்ஜி கொடுக்கின்றன என்பது வயதுக்கேற்றாற்போல் மாறுபடும். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

20 வயதில் உள்ளவர் சாப்பிடுவதைப் போல 60 வயதிலுள்ளவரும் சாப்பிடக் கூடாது. அதேபோல் உணவில் அளவு தாண்டக் கூடாது. உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், அளவோடு உண்கிறவருக்கு பொதுவாக எடை கூடாது.

பருமனை உண்டாக்குவதில் சர்க்கரைக்கும், இனிப்பு உணவுகளுக்கும்தான் முதல் இடம். மைதா, செயற்கை குளிர்பானங்கள், பொரித்த உணவுகள் ஆகியவை பருமனை உண்டாக்கும் உணவுப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றன.

சிறுதானியங்கள், கோதுமை, அரிசி போன்ற தானியங்கள் பட்டைதீட்டப்பட்டால் (பாலிஷ் செய்யப்பட்டு), அவை கார்போஹைட்ரேட் மிகுந்தவையாக மாறிவிடும்.

இப்படிப் பட்டைத் தீட்டப்பட்டவற்றில் உணவு தயாரித்தால், அவை கார்போ உணவுகளாக (Refined Carbo) கிடைக்கும்பட்சத்தில், அவையும் எடையைக் கூட்டவே செய்யும்.

சில நேரங்களில் ஆரோக்கியம் என்று நாம் நினைக்கும் உணவுகளும்கூட எடையைக் கூட்டும். உதாரணத்துக்கு, மில்க் ஷேக் குழந்தைக்கு நல்லதுதானே என்று கொடுப்போம். அதில் புரதம், கால்சியம் இருக்கிறது என்றும் நினைப்போம். ஆனால், 200 மில்லி அளவுள்ள மில்க் ஷேக்கில் 24 கிராம் சர்க்கரை கலக்கப்பட்டிருக்கும். சராசரியாக 5 டீஸ்பூன் சர்க்கரை அதில் இருக்கிறது என்றால் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே, பாக்கெட் அல்லது டின் உணவுப்பொருள் வாங்குவதாக இருந்தால் அட்டையிலுள்ள ஊட்டச்சத்து விவரங்களைப் படிக்க வேண்டும். அதிகம் பயன்படுத்தவும் கூடாது.

இதேபோல் செயற்கை குளிர்பானங்களில் உள்ள கஃபைனும், அதிகப்படியான சர்க்கரையும் மீண்டும் மீண்டும் நம்மை சுவைக்கத் தூண்டும் அடிமைத்தனத்தை உண்டாக்கும் வல்லமை கொண்டவை. எனவே, அவற்றையும் தவிர்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்:  இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட் டிரெஸ் எது தெரியுமா?

மோடியை வரவேற்க காந்தியை அனுப்பிய ஸ்டாலின்

ஹெல்த் டிப்ஸ்: ஜிம்முக்கு செல்லாமல் எடையைக் குறைக்கலாம்!

பியூட்டி டிப்ஸ்: நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற நெயில் பாலிஷ் எது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share