உடல் பருமனை உடனே குறைக்க வேண்டும் என்கிற ஆர்வக் கோளாறில் ஜிம்மில் சேர்ந்து, ஒரு வாரம் உற்சாகமாகச் சென்று, அதோடு ஜிம்முக்கு செல்லாமல் இருப்பவர்கள்தான் அநேகம் பேர். ஆனால் ஜிம்முக்கு செல்லாமலும் எடையைக் குறைக்கலாம்.
`புல் அப் (Pull up), `புஷ் அப்’ (Push up), `ஸ்குவாட்’ (Squat) போன்ற சில பயிற்சிகளை எந்த உபகரணங்களும் தேவையில்லாமல் நம் உடலை வைத்தே செய்ய முடியும். இதை ‘ஓன் பாடி வொர்க்அவுட்’ (Own body workout) என்று சொல்கிறார்கள் ஃபிட்னெஸ் ட்ரெயினர்ஸ். ஆனால், இவற்றை ஒரு பயிற்சியாளரிடம் முறையாகத் தெரிந்துகொண்ட பின் வீட்டிலேயே செய்யலாம். இல்லாவிட்டால் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
நடப்பதே சிறந்த உடற்பயிற்சிதான். முதலில் மெதுவாக நடை பழகலாம். அந்த முறை போரடிப்பதாகத் தோன்றினால் ‘டெம்போ வாக்’ (Tempo walk) என்ற வேகமான நடையைப் பின்பற்றலாம். அதன் பிறகு நடைப்பயிற்சி செல்லும் தூரத்தை அதிகரித்து நீண்ட தூரத்துக்குச் சென்று வரலாம்.
சைக்கிள் ஓட்டுவது சிறப்பான பயிற்சி. அதேபோல் நீச்சல், ஸூம்பா, ஜாகிங், யோகா என பல வழிகளில் ஜிம்முக்கு செல்லாமல் எடையைக் குறைக்க முடியும்.
பயிற்சிகள் எதுவாக இருந்தாலும் அதில் ஒரு நிலைத்தன்மை இருக்க வேண்டும். தொடர்ச்சியாகச் செய்யும் ஒழுக்கம் வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும். ‘கொஞ்ச நாளா ஸூம்பா போனேன். பலன் இல்லை. அதனால சைக்கிளிங்க்கு மாறிட்டேன்’ என அலைபாயக் கூடாது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இப்படியும் ஒரு தேர்தல் கூட்டணி: அப்டேட் குமாரு
மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின்
திமுக கூட்டணியில் சீறும் சிறுத்தைகள்… அன்புமணி வெயிட்டிங்!
டிஜிட்டல் திண்ணை: மோடி வந்து சென்றபின்… எடப்பாடிக்கு பாஜக எச்சரிக்கை!